Saturday, September 3, 2011

மங்காத்தாவில் நடித்திருப்பது அஜித் இல்லை - அதிரடிப் புகார்!

மங்காத்தாவில் நடித்திருப்பது அஜித் அல்ல என அதிரடிப் புகார் எழுந்துள்ளது. மங்காத்தா திரைப்பட்ம் நல்ல வசூல் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிற்து. இந்த நிலையில் இதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள சில விஜய் ரசிகர்கள் - மங்காத்தாவில் நடித்திருப்பது அஜிதே இல்லை என்றனர். “படம் நல்லா இருக்கு. ’Stunts’ நல்லா இருக்கு. 'Dance' லாம் நல்லா ஆடியிருக்காரு. அதனால இந்த hero role பண்ணி இருக்கறது அஜித் மாறியே இருக்கற வேற யாரோ sir.” என்றார் போக்கிரி பக்கிரி.



திரு. கில்லி குமார் கூறுகையில் “எனக்கு வயசு 40 னு ஒரு சீன்ல சொல்றாரு சார். ஒரு hero செய்யற வேலையா இது?. Climax ல எல்லா பணத்தையும் government கிட்ட குடுத்து ஒரு commissioner ஆகிற மாதிரி முடிக்கிறதுதான தமிழ் சம்பிரதாயம். அப்டி பண்ணலங்கிறதுல இருந்தே இதுல எதோ உள்குத்து இருக்குனு நெனச்சோம் சார்” என்றார்.

இது பற்றிக் கருத்து கேட்க திரு.விஜய் யைத் தொடர்பு கொண்டபோது, அவர் தன் தந்தையிடம் பேசி விட்டுக் கருத்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.